
ஆண்டு தோரும் தமிழக அரசு சார்பாக குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வரிசையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி
தமிழகத்தில்,1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும்,இதற்காக மொத்தம் ரூ.210 கோடி செலவாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
பொங்கல் பரிசு
ஒரு கிலோ- பச்சரிசி,
ஒரு கிலோ -சர்க்கரை,
2 அடி நீள கரும்பு,
முந்திரி -20கிராம்,
திராட்சை- 20கிராம்,
5 கிராம்- ஏலக்காய்
இவை அனைத்தையும்,ரேஷன் கடைகளில் சென்று,பொங்கலுக்கு முன்னதாகவே பெற்றுக் கொள்ளலாம்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு,இனிமையான பொங்கல் வைத்து குடும்பத்தோட கொண்டாடி மகிழலாம்.