செல்லாத நோட்டுகளால் மலை காய்கறி விலை வீழ்ச்சி…

First Published Nov 26, 2016, 11:27 AM IST
Highlights


பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாததால் மலை காய்கறி விலை வீழ்ச்சியடைந்து உள்ளதாக நீலகிரி மாவட்ட விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இயற்கை முறையில் விளைவிப்பதால், இவற்றினால் கணிசமான வருவாயும் இவர்களுக்கு கிடைக்கிறது.

இந்த நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை மேட்டுப்பாளையம் சந்தையில் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கூறினர். மேலும், முன்பெல்லாம் கேரட் ரூ.35-க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது, கேரட் 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று பாதிகப்பட்டோர் கவலைத் தெரிவித்தனர்.

click me!