அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் வசதி அறிமுகம்...

First Published Mar 2, 2018, 10:37 AM IST
Highlights
Introduction of Cycling with GPS connectivity at Alappa University


சிவகங்கை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பயன்படுத்த ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் பயன்பாட்டுக்காக குர்கான் பைஷேர் நிறுவனத்துடன் இணைந்து ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் பயன்பாட்டுக்காக குர்கான் பைஷேர் நிறுவனத்துடன் இணைந்து ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய சைக்கிள் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையா அறிமுகம் செய்து வைத்து சைக்கிளில் வலம் வந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "பல்கலைக்கழக வளாகத்தில் ஸ்மார்ட் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை உருவாக்கவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தனி மனிதனின் உடல்நலம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்துவதோடு, பசுமை வளாகத்தையும் உருவாக்க இத்திட்டம் உதவும்.

மொபிசி ஒரு பயன்பாட்டு அடிப்படையிலான டாக்லெஸ் சைக்கிள் பகிர்வு தொழில்நுட்ப தளமாகும். இதனை பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் க்யூஆர் குறியீடு ஸ்கேனிங் செய்தவன் மூலம் சிறிய தூரத்தை குறைந்த செலவில் சைக்கிளில் பயணிக்கலாம்.

மொபிசி செயலியை பயன்பாட்டாளர் பதிவிறக்குவதன் மூலம் இங்குள்ள எந்த சைக்கிளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு 1 மணி நேரத்திற்கு ரூ. 10 அல்லது மாதாந்திர சந்தா கட்டணமாக ரூ. 99 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கணினி பயன்பாடு மற்றும் ஐஓடி சார்ந்த ஸ்மார்ட் ஜிபிஎஸ் மூலம் இந்த சைக்கிள்கள் இயங்கி விருக்கின்றன.  இதன் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் எந்த இடத்தில் சைக்கிள்கள் உள்ளன என்பதை அறியமுடியும்.

க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் சைக்கிள் பூட்டைத் திறக்கவும், ஒரு சைக்கிளை மட்டுமே பயன்படுத்த முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

 

click me!