
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
சென்னையை பெருமைப்படுத்தும் விதமாக ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஐ.என்.எஸ் சென்னை கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மும்பை கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மேற்கு மண்டல கடற்படையில் ஐஎன்எஸ் போர்க்கப்பலை சேர்த்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலான இது 164 மீட்டர் நீளமும், 7,500 டன் எடையுடையும் கொண்டது. ஏவுகணைகளை தாங்கிச் சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த கப்பலில் இரண்டு ஹெலிகாப்டர்கள் உள்ளன.
இதேபோன்று இந்திய தயாரிப்பில் உருவான ஐஎன்ஸ் கொல்கத்தா, கடந்த 2014-ம் ஆண்டும், ஐஎன்எஸ் கொச்சி, கடந்த 2015-ம் ஆண்டும், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.