இனி Flipkart-ல் மளிகை சாமான்களும் வாங்கலாம்

Asianet News Tamil  
Published : Nov 21, 2016, 05:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
இனி Flipkart-ல் மளிகை சாமான்களும் வாங்கலாம்

சுருக்கம்

மின்னணு வர்த்தகத்தில் முன்னிலையில் உள்ள நிறுவனமான ப்ளிப்கார்ட், ஆன்லைனில் மளிகை சாமான் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பின்னி பன்சால் கூறுகையில், ப்ளிப்கார்ட் நிறுவனம் தற்போது மின்னணு வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளது. தற்போது, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மளிகை சாமான்களையும் ஆன்லைனிலே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டமானது கடினமானது. அதே சமயத்தில், லாபகரமானது.  இந்த விற்பனையானது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்படும். இந்த விற்பனை மூன்று ஆண்டுகளுக்குள் விரிவுப்படுத்தப்படும். மேலும், பர்னிச்சர் விற்பனையும் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் மேம்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.   

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் தமிழக விசிட்...! அதிமுக-பாஜகவுக்கு திமுக தரப்போகும் ட்விஸ்ட்..!
குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி