Indian Army : பீரங்கி படையை வலுப்படுத்தும் இந்திய ராணுவம்.. மூன்றாவது தனுஷ் படைப்பிரிவை உருவாக்கத் தொடங்கியது

Published : Jun 20, 2025, 10:53 AM IST
Dhanush artillery regiment - Indian Army

சுருக்கம்

இந்திய ராணுவம் தனுஷ் இழுவை பீரங்கி அமைப்புகளின் மூன்றாவது படைப்பிரிவை உருவாக்கி வருகிறது. இந்த 155 மிமீ பீரங்கி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது மற்றும் 38 கிமீ தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. 

Indian Army begins formation of third Dhanush brigade : உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளுக்கு இடையே மோதல்கள் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. எனவே தங்கள் நாட்டை பாதுகாக்க நவீன ஆயுதங்களுக்கு மாறி வருகிறது. முன்பு போர் என்றால் நேருக்கு நேர் துப்பாக்கியை கொண்டும், விமானத்தின் மூலம் குண்டுகள் போட்டும் மோதலில் ஈடுபட்டு வருவார்கள். தற்போது உருவாகியுள்ள நவீன காலத்தில் இருக்கிற இடத்தில் இருந்து ட்ரோன் மூலமாகவும் சக்தி வாய்ந்த ஏவுகனைகள் மூலமாகவும் ஒரு நாட்டை தாக்க முடிகிறது. 

மேலும் அந்த தாக்குதலை முறியடிக்க வான் பாதுகாப்பு அம்சமும் தற்காப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவமும் தங்களது ஆயுதங்களை புதுமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவத்தில் தனுஷ் என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 155 மிமீ இழுவை பீரங்கி ஆகும்.

பீரங்கி திறனை மேம்படுத்தும் இந்தியா

பீரங்கி திறன்களை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இந்திய ராணுவம் தனுஷ் இழுவை பீரங்கி அமைப்புகளின் மூன்றாவது படைப்பிரிவை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளது. பாதுகாப்பு துறையிலிருந்து கிடைத்த தகவலின் படி, இரண்டாவது படைப்பிரிவுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து மூன்றாவது படைப்பிரிவுக்காக சில பீரங்கிகளை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படைப்பிரிவும் 18 தனுஷ் பீரங்கிகளை உள்ளடக்கியதாகும். இதில் முதல் தொகுதி 6 துப்பாக்கிகள் 2019 ஏப்ரல் 8-ம் தேதி அதிகாரப்பூர்வமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டன.

இந்த உற்பத்தி பணிக்கு ரூ.1,260 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தின் கீழ், ஜபல்பூரை தளமாகக் கொண்ட அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் (AWEIL) நிறுவனம் பொறுப்பாக உள்ளது. அனைத்து 114 தனுஷ் இழுவை பீரங்கிகளும் மார்ச் 2026க்குள் வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இருப்பினும், தயாரிப்பு சிக்கல்கள் மற்றும் பிற சூழ்நிலைகளால் குறித்த நேரத்தில் வழங்குவது சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனுஷ் இழுவை பீரங்கியின் சிறப்பம்சங்கள்

தனுஷ் 155 மிமீ/45 காலிபர் இழுவை ஹோவிட்சர் என்பது, முன்னர் பயன்படுத்தப்பட்ட போஃபோர்ஸ் துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இது இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் நீண்ட தூர பீரங்கியாகும்

முக்கிய அம்சங்கள்:

  • தாக்குதல் தூரம்: 36–38 கிமீ
  • ஜிபிஎஸ் அடிப்படையிலான துப்பாக்கி பதிவு மற்றும் ஆட்டோ-லையிங் தொழில்நுட்பம்
  • மேம்பட்ட கணினி கணக்கீடு மற்றும் முகவாய் வேக அளவீடு
  • கேமரா, வெப்ப இமேஜிங், லேசர் ரேஞ்ச்ஃபைண்டர் உட்பட தானியங்கி பார்வை அமைப்பு
  • 80% உள்நாட்டு உற்பத்தி
  • அனைத்து நிலத்திலும் செயல்படக்கூடியது
  • பகல் மற்றும் இரவு இரு நேரங்களிலும் தாக்குதலுக்கு ஏற்றது

இந்த இழுவைத் துப்பாக்கி அமைப்புகள், இந்திய ராணுவத்தின் பீரங்கி தாக்குதலுக்கான திறனை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தவல்லவை என எதிர்பார்க்கப்படுகிறது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!