ரூ.48 லட்சம் பணம்,40 கிலோ தங்கம் பறிமுதல் - தொடர்கிறது ரெய்டு.. மொத்த விவரம் மாலை தெரியும்

First Published Dec 21, 2016, 2:59 PM IST
Highlights


தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு உட்பட 13 இடங்களில் வருமானவரித்துரையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் நடத்திய சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்டு என்று கூறப்படுகிறது. 

ரெய்டுக்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாம். ராம் மோகன் ராவ் தனது தம்பி சீனிவாச ராவ், மச்சான் ஹரிபாபு மற்றும் அவரது மகன் பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. 

இதேபோல் ராம்மோகன் ராவுக்கு சொந்தமான ஆந்திர மாநிலம் பிரசாகம் மாவட்டத்தில் உள்ள 2 வீடுகளிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றன.

இதுவரை நடத்திய சோதனையில் ராம்மோகன ராவின் சித்தூர் வீட்டில் ரூ.26 லட்சம் பணம், 4கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதே போல் சென்னை வீட்டில் ரூ.14 லட்சம் கணக்கில் வராத கருப்பு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனவே இதுவரை மொத்தம் ரூ.48 லட்சம் பணம்,40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று மாலை முழு விவரமும் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!