சேகர் ரெட்டியின் "வாட்ஸப்பால்" சிக்கிய ராம் மோகன் ராவ் - பகீர் தகவல்கள்..!!

First Published Dec 21, 2016, 4:23 PM IST
Highlights


தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைமை செயலாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் மும்முனை தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள சிபிஐ, வருமான வரிதுறை, அமலாக்கத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து துணை இராணுவ படைகளோடு வந்து இறங்கி விட்டனர்.

இந்த அளவிற்கு பலத்த பாதுகாப்போடு ராம் மோகன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த மத்திய அரசுக்கு சேகர் ரெட்டி மூலமாக கிடைத்த ஆதாரங்கள்தான் காரணம் என கூறப்படுகிறது

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வருமான வரித்துறையின் வலையில் தேவையில்லாமல் சிக்கினார் சேகர் ரெட்டி

அதாவது ராம மோகன் ராவ் மற்றும் சில அமைச்சர்களின் கருப்பு பணத்தை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து எடுத்து ராம் மோகன் ராவுக்கு மாற்றி கொடுத்தது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்தே ரெய்டு மற்றும் மற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சேகர் ரெட்டியின் சகாக்களான சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி, ஆகியோரை விசாரணையின்போதே செமத்தியாக கவனித்துள்ளனர்.

இவர்கள் உளறி கொட்டியதன் அடிப்படையில் சேகர் ரெட்டி சீனிவாச ரெட்டி பிரேம் ரெட்டி ஆகிய மூன்று பேரின் வாட்சப் கால்களை வாட்சப் நிறுவனத்தின் உதவியோடு தோண்டி துருவி எடுத்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள்.

அந்த கால்கள் மூலமாக ராம் மோகன் ராவின் பண பரிவர்த்தனை மற்றும் ஏராளமான ஊழல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இறுதியில் ராம் மோகன் ராவை காட்டிகொடுத்தது வாட்சப் கால்கள்தான் என்று கூறப்படுகிறது

click me!