சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறை - தலைமை செயலகத்துக்குள் ரெய்டு பொதுமக்கள் அதிர்ச்சி

First Published Dec 21, 2016, 3:25 PM IST
Highlights


சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக துணை ராணுவப்படை உதவியுடன் ஒரு மாநிலத்தின் தலைமை செயலகத்துக்குள் நுழைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்துவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை செயலாளர் மீது காண்ட்ராக்டர் சேகர் ரெட்டி  வீட்டில் நடத்திய ரெய்டு அடிப்படையில் கிடைத்த தகவலை வைத்து ரெய்டு வருகிறது. தமிழக அமைச்சர்கள் சிலருடனும் அவருக்கும் அவரது மகனுக்கும் வியாபார தொடர்பு உள்ளது என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து  ராம் மோகன் ராவ் வீடு அவரது மகன் மற்றும் தம்பி உறவினர்கள் வீடு உட்பட 13 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைமை செயலாளர்வீட்டில் சோதனையும், அதற்கு பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை அழைப்பதும் , தமிழக போலீசை மீறி நடந்ததும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. 

அதிரடிக்கு மேல் அதிரடியாக திடீரென வருமான வரித்துறையினர் தலைமை செயலக்த்தில் உள்ள தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். 

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது போன்று தலைமை செயலகத்துக்குள் வருமான வரித்துறை , அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நுழைந்ததும், துணை ராணுவம் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டதும் மாநிலம் முழுதும் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது. 

அத்துமீறுகிறதா மத்திய அரசு என ஒரு சாரர்ரும் , தப்பு செய்தால் யாராக இருந்தால் என்ன என்று ஒருசாரரும் இதை விவாதப்பொருளாக்கியுள்ளனர். வரலாற்றின் கேவலங்களில் இதுவும் சேர்ந்துவிட்டது என நேர்மையான அதிகாரிகள் வருத்தப்படுகின்றனர். 

நேற்று டெல்லியில் பிரதமரை சந்திப்பவர் இன்று வருமான வரித்துறை விசாரணையில் சிக்கி நிற்கிறார். இதுபோன்ற கேவலத்தை இதற்கு முன்னர் நாடு சந்தித்தது இல்லை என்று கூறுகின்றனர் நேர்மையான அதிகாரிகள்.

தலைமை செயலகத்துக்குள் துணை ராணுவத்தினர் துணையுடன் நடக்கும் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே நேரம் ராம் மோகன் ராவ் வீட்டில் ஏராளமான ஹார்ட் டிஸ்க்குகள், அவருடைய லாப்டாப்புகள், டைரிகள் , மெயில் விபரங்களை வருமான வரித்துறையினர் அள்ளியுள்ளனர். 

இது தவிர கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பிட நகை மதிப்பீட்டாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

click me!