
தமிழகத்தை உலுக்கிய ஐ.டி. ரெய்டில் சசிகலா, தினகரன், பாஸ்கரன் என்று அக்குடும்பத்தின் நேரடி உறுப்பினர்கள் மட்டுமில்லாது அவர்களுடன் பிஸ்னஸ் உள்ளிட்ட வகையில் நெருக்கத்தில் இருந்த மனிதர்களும் ரெய்டுக்கு ஆளானார்கள். அந்த வகையில் கோயமுத்தூரை சேர்ந்தவரும், மணல் பிஸ்னஸில் கொடிகட்டி பறந்தவருமான ஓ.ஆறுமுகசாமியின் சொத்துக்களும் அடக்கம்.
இந்த ஆறுமுகசாமி கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒக்கலிக கவுடர் எனும் சமுதாயத்தை சேர்ந்தவர். அந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் ஆறுமுகசாமியின் சொத்துக்கள் 3 நாட்களாக கிடுக்கிப் பிடி ரெய்டில் சிக்கி இப்போது சூழல் நார்மலாகி இருக்கும் நிலையில் இன்று காலை முதல் ஒரு வாட்ஸ் ஆப் பதிவு படபடத்துக் கொண்டிருக்கிறது.
அதாவது ‘ஒக்கலிக சொந்தங்களே நமது கொடை வள்ளல் ஓ.ஆறுமுகசாமி ஐயா அவர்களின் கோவை ராம்நகர் அலுவலகத்திற்கு அனைவரும் உடனடியாக வரவும். மிகவும் அவசரம்: இப்படிக்கு- வெள்ளிங்கிரி, மாநில தலைவர், ஒக்கலிகர் சங்கம்.’ என்பதுதான் அந்த பதிவு.
இந்த வாட்ஸ் ஆப் பதிவு போலீஸின் பார்வைக்கும் போயி, அவர்கள் வெள்ளிங்கிரியை விசாரிக்க, இப்படி எந்த ஏற்பாடுமில்லை, இப்படியொரு அறிவிப்பை தான் வெளியிடவுமில்லை என்று அவர் மறுத்திருக்கிறார். ஆனாலும் போலீஸ் ஆறுமுகசாமி வட்டாரத்தை நெருக்கமாக வாட்ச் செய்து கொண்டிருக்கிறதாம். எங்களிடம் இல்லை! என்று சொல்லிவிட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஏதாவது ஆலோசனைகளை மறைமுக கூட்டத்தில் நடத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவல்.
ரெய்டு ஷாக்கினால் டென்ஷனிலும், கவலையிலுமிருந்த ஓ.ஆறுமுகசாமியை இந்த திடீர் பிரச்னை மேலும் கலங்கடைய வைத்திருக்கிறது என்கிறார்கள்.