
விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழு அடைப்பை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினர் திருவாரூரில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினரின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அனுமதி இன்றி பேரணி மற்றும் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருமண மண்டபம் ஒன்றில் மு.க.ஸ்டாலின் தங்க வைக்கப்பட்டுள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் பொதுமக்கள் அணி அணியாக முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.