தமிழ்நாட்டில் ஆட்சியர்கள் முதல் 16 காவல் அதிகாரிகள் வரை அதிரடி பணியிட மாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு

Published : Oct 11, 2023, 10:14 PM IST
தமிழ்நாட்டில் ஆட்சியர்கள் முதல் 16 காவல் அதிகாரிகள் வரை அதிரடி பணியிட மாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு

சுருக்கம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு  உத்தரவிட்டுள்ளது. மேலும் 16 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் அவ்வப்போது நடப்பது உண்டு. கடந்த சில மாதங்களாக அரசு அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரபுசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராக நியமனம். கரூர் மாவட்ட ஆட்சியராக தங்கவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொழிற்கல்வி ஆணையராக வீரராகவராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம், தூத்துக்குடி ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ் சிப்காட் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல காவல்துறை உயர் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகர காவல் ஆணையராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீருடை பணியாளர் தேர்வாணைய செயலாளராக தமிழ்ச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சிபிசிஐடி எஸ்.பி. ஜெயக்குமார் திருவாரூர் மாவட காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம், குடிமைப் பணிகள் சி.ஐ.டி டிஜிபி வன்னியப் பெருமாள் ஊர்க்காவல்படை கமாண்டன்ட்டாக பணியிடமாற்றம், தென்காசி எஸ்.பி. சாம்சன் சென்னை போதைப்பொருள் தடுப்பு எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கரூர் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எஸ்பியாக இருந்த ஹரிகிரண் பிரசாத், ராமநாதபுரம் கடலோர காவல் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் எஸ்பியாக இருந்த சுந்தரவதனம் கன்னியாகுமரி எஸ்பியாக பணியிடமாற்றம், காவலர் பயிற்சி பள்ளி ஐஜியாக இருந்த தமிழ்ச்சந்திரன் சீருடை பணியாளர் தேர்வாணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

ராமநாதபுரம் கடலோர காவல் எஸ்பியாக இருந்த சுந்தர வடிவேல் நீலகிரி எஸ்பியாக நியமனம், காத்திருப்பு பட்டியலில் இருந்த திஷா மிட்டல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக மாற்றம்.  ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டிஜிபி அலுவலக எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!