இனி ஸ்மார்ட் கார்டு இருந்தாத்தான் ரேஷனில் அரிசி !!  நாளை முதல் அறிமுகம் !!!

 
Published : Aug 31, 2017, 05:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
இனி ஸ்மார்ட் கார்டு இருந்தாத்தான் ரேஷனில் அரிசி !!  நாளை முதல் அறிமுகம் !!!

சுருக்கம்

In ration shops it will be supply rice only by smart card

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் ரேஷன்  கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலமாக பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர்,  சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட  உணவு பொருட்கள் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள்  பெற்றவர்களுக்கு மின்னணு அட்டை மூலமாகவே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குடும்ப அட்டை அச்சிடப்பட்டு மண்டல அலுவலகம் மற்றும் வட்ட அலுவலகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மின்னணு அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரையில் தமிழகத்தில் ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன என்றும் மீதமுள்ள குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்த சுட்றறறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதைத் தொடர்ந்து நாளை முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும்,  ஸ்மார்ட் கார்டு  பெற்றவர்களுக்கு, மின்னணு குடும்ப அட்டை மூலம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
எமன் ரூபத்தில் வந்த டாடா ஏசி..! கல்யாணத்துக்கு தயாராகி வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! கதறும் குடும்பத்தினர்!