குன்னூரில் நாயை பிடிக்க வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை...அலறி அடித்து ஓடிய பெண்கள்-காப்பாற்ற சென்ற 5 பேர் காயம்

By Ajmal Khan  |  First Published Nov 12, 2023, 9:59 AM IST

 நாயை பிடிக்க வீட்டிற்குள் சிறுத்தை புகுந்ததால், அலறி அடித்து ஓடிய பெண்கள், சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து அடைத்தனர். இதனையடுத்து உள்ளே சென்ற வனத்துறையினரை சிறுத்தை தாக்கியதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை

நீலகிரி மாவட்டத்தில் யானை,மான், சிறுத்தை, புலி கரடி உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு இரையை தேடி வரும். அப்போது மனிதர்களை தாக்கி கொல்லும் சம்பவமும் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தநிலையில்  நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக் லேண்ட்ஸ் பகுதியில் பாழடைந்து முழுமை அடையாத வீட்டில் விமலா என்ற பெண்ணும் அவரது இரண்டு மகன்களும், ஒருமகளும் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.  இன்று அதிகாலை இந்த நாயை பிடிப்பதற்காக சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது.

Tap to resize

Latest Videos

சிறுத்தை தாக்கியதில் 5 பேர் காயம்

இதனைபார்த்து அலறிய விமலா மற்றும் குடும்பத்தினர் வேறொரு வாசல் வழியாக வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்குள் சிறுத்தையை வைத்து மூடியுள்ளனர். இது தொடர்பாக தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து  சிறுத்தையை பிடிக்க முயன்றனர். அப்போது சிறுத்தை தாக்கியதில் தீயணைப்பு துறையினர் 3 பேரும், வருவாய் துறை அதிகாரி ஒருவரும், பத்திரிக்கையாளர் ஒருவரும் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது வனத்துறையினர் குன்னூர் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் உள்ளனர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதுமலையிலிருந்து மருத்துவர் ராஜேஷ் வரவழைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

குறைந்தது வெங்காயம் விலை.. அதிகரிக்கும் தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
 

click me!