
சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிங்கப்பூர் வாலிபர் ஒருவரிடம், ஆட்டோவில் வந்த திருநங்கைகள், ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிங்கப்பூரை சேர்ந்தவர் சுக்லா. துபாயில் வேலை பார்த்து வருகிறார். சிகிச்சைக்காக சென்னை வந்த சுக்லா, ராயப்பேட்டையில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பணம் தேவைப்பட்ட காரணத்தால், தன்னிடம் இருந்த வெளிநாட்டு கரன்சியை பண மாற்று மையத்தில் இந்திய ரூபாயாக மாற்றி கொண்டு, மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
அப்போது, அவரை உரசியபடி ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 திருநங்கைகள், சுக்லாவை அடித்து உடைத்து, அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்து கொண்டு மின்னல் வேக்ததில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில், சுக்லா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பவு செய்து விசாரிக்கின்றனர்.