குண்டர் சட்டத்தில் சிறை – தீர்ப்பாயம் முன்பு திருமுருகன் காந்தி ஆஜர்…

 
Published : Jun 29, 2017, 02:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
குண்டர் சட்டத்தில் சிறை – தீர்ப்பாயம் முன்பு திருமுருகன் காந்தி ஆஜர்…

சுருக்கம்

Imprisoned in gundas act - Thirumurugan Gandhi produced in court

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின்திருமுருகன்காந்தி, இளமாறன், டைசன், அருண்குமார் ஆகியோர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அறிவுரைக் கழகம் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.

குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பானம்,திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.

இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.

ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதற்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருமுருகன்காந்தி, இளமாறன், டைசன், அருண்குமார் ஆகியோர்சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அறிவுரைக் கழகம் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இக்குழுவின் முன் வழக்கறிஞர்களை கொண்டு வாதாட முடியாது. எனவே குற்றம் சாட்டவர் அவரே தனக்காகவோ அல்லது அவரது வழக்கறிஞர் அல்லாத உறவினர்கள் மற்றும் நண்பர்களை கொண்டு வாதாட வேண்டும்.

அதன்படி திருமுருகன் காந்திக்காக பேராசிரியர் சிவகுமாரும், டைசனுக்காககொளத்தூர் மணியும், இளமாறனுக்காக பொறியாளர் காந்தியும், அருண்குமாருக்காகமுகிலனும், வாதாடினர். 

PREV
click me!

Recommended Stories

LED பல்ப் முறைகேட்டில் வேலுமணியை இறுக்கும் ED.. அதிக தொகுதிகளை பறிக்க பாஜக ஸ்கெட்ச்..?
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்