
காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரி புலாய்னாய்வுத் துறை அறிவித்துள்ளது.
அதிரி புதிரி அரசியல் டூவிஸ்டுகளைக் கண்டு கிஞ்சிற்றும் கலங்காத தமிழக மக்கள் தற்போது வருமான வரித்துறையின் அதிரடி சோதனைகளைக் கண்டு கதிகலங்கிப் போயுள்ளனர்.
மணல் மாஃபியா சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோனராவ், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், என உயர்மட்டத் தலைகளை ஆட்டங்காணச் செய்த வருமான வரித்துறை, தற்போது தனது கவனத்தை தொழில்நிறுவனங்கள் மீது திருப்பியுள்ளது.
கோகுலம் நிதி நிறுவனத்தில் இருந்து தனது முதல் இன்னிங்சை வெகு வலுவாகத் தொடங்கிய வருமான வரி புலனாய்வுத்துறை.யினர் தற்போது காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் காலூன்றி காட்டு காட்டு என காட்டி வருகின்றனர்.
சென்னை, மதுரை, கோவை, ஈரோடு என இந்நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் இருக்கும் இடங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
நாள் முழுவதும் நடைபெற்ற சோதனைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் முரளிகுமார் இது சும்மா டிரைலர் தான் இனி தான் மெயின் பிக்சரே இருக்கு என அசால்டாக அணுகுண்டு வெடிக்க அரண்டு போய் இருக்கிறது தொழில்நிறுவன வட்டாரங்கள்.
“காளீஸ்வரி நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.வரி ஏய்ப்பை கண்டறிவது தான் சோதனையின் நோக்கம். ஆவணங்களை முழுமையாக சோதனை செய்த பிறகு தான் வரி ஏய்ப்பு பற்றி தெரியவரும்.” இவ்வாறு கூறினார்.,
வரி ஏய்ப்பு செய்தவர்கள் ஏங்கித் தவிக்கும் காலம் இது…..