தேர்வர்கள் கவனத்திற்கு!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.. முக்கிய அறிவிப்பு

By Thanalakshmi V  |  First Published Sep 4, 2022, 10:40 AM IST

தமிழகத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை மற்றும் குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
 


தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதேபோன்று, ஜூலை 24 ஆம் தேதி காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 

மேலும் படிக்க:செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள்...! என்ன பதிவிட்டுள்ளார்கள் தெரியுமா..?

Tap to resize

Latest Videos

இந்நிலையில் குரூப் 2/2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில் முடிவுகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். எனவே குரூப் 2/2ஏ முதன்மை தேர்வுக்கு தயாராகுவதற்கு, தேர்வர்கள் முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் குழப்பமடைந்தனர். 

மேலும் படிக்க:சசிகலாவின் ஒற்றை வார்த்தை டுவீட் ஒற்றுமை ..! ஆர்.பி.உதயகுமார் கொடுத்த பதிலடி

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி பல்வேறு அரசுப் பணி சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுப்போல் அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!