எங்களின் போராட்டத்தைத் தடுக்க முயன்றால் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்வோம் - விவசாயிகள்

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 09:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
எங்களின் போராட்டத்தைத் தடுக்க முயன்றால் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்வோம் - விவசாயிகள்

சுருக்கம்

If you try to stop our struggle we will suicide - farmers

தூத்துக்குடி

பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களின் போராட்டத்தைத் தடுக்க முயன்றாலோ, காவலாளர்கள் மூலம் தடியடி நடத்தி விரட்டியடிக்க முயன்றாலோ எங்கள் கையில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலையில் காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது

“கடந்த இரண்டு ஆண்டுகளில் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை திரும்பப் பெற்று, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கைகளை இந்தப் போராட்டத்தில் வலியுறுத்திநர்.

இந்தப் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட காங்கிரசுத் தலைவர் சீனிவாசன் காத்திருக்கும் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதில், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க முயன்றாலோ, காவலாளர்கள் மூலம் தடியடி நடத்தி விரட்டியடிக்க முயன்றாலோ கையில் வைத்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில செயலாளர்கள் கீதா, நம்பிராஜன், மாவட்டத் தலைவர்கள் போத்திராஜ் (நெல்லை), தங்க தர்மராஜன் (அரியலூர்), ரெங்குதாஸ் (விருதுநகர்), மாவட்டச் செயலாளர் துரைராஜ், காவிரி பாசனக் கூட்டு இயக்கத் தலைவர் இளங்கீரன், சாமியா, நவநீதகிருஷ்ணன், அழகர்சாமி மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்

PREV
click me!

Recommended Stories

வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!
அன்புமணியை வளைத்துப்போட்ட இபிஎஸ்..! அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள்..?