ரௌடிகள் பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் – சிங்கம் பாணியில் காவலாளர்கள் அதிரடி…

 
Published : Jul 03, 2017, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
ரௌடிகள் பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் – சிங்கம் பாணியில் காவலாளர்கள் அதிரடி…

சுருக்கம்

if you got threaten by rowdies should immediately report to the police

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முக்கியப் பிரமுகர்களை பணம் கேட்டு மிரட்டும் ரௌடிகளை பிடிக்கும் நடவடிக்கயில் ஈடுபட்டுள்ள காவலாளர்கள், குடியிருப்புப் பகுதியில் இருக்கும் மக்களிடம் “ரௌடிகள் யாரேனும் மிரட்டினாலோ, பணம் கேட்டாலோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பணம் கேட்டு மிரட்டுதல், கடத்துதல், ஆட்களைக் கொலை செய்தல் போன்றவற்றை ரௌடிகள் அதிகளவில் நடத்தி வந்தனர்.

ஓசூரில் முக்கியப் பிரமுகரை கொலை செய்த வழக்கில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரௌடி ஒருவர், தனது கூட்டாளிகளின் உதவியுடன் ஓசூரில் உள்ள முக்கிய பிரமுகர்களை இரவு நேரத்தில் சந்தித்து, தனக்கு ரூ.10 இலட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இரவு நேரத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு தனது கூட்டாளிகளுடன் அந்த ரௌடி நகரில் சுற்றியது குறித்தும், பிரமுகர்களை பணம் கேட்டு மிரட்டியது குறித்தும் தகவலறிந்தார் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார்.

எனவே, ஓசூரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் தலைமையில், காவலாளர்கள் ரௌடிகளை கண்காணிக்கும் பணியைத் தொடங்கினர்.

இதில் முதல் கட்டமாக ஓசூர் நகர, அட்கோ, மத்திகிரி, சிப்காட் ஆகிய நகர காவல் நிலையங்களில் உள்ள பிரபல ரௌடிகளின் பட்டியலை எடுத்துள்ளனர். அந்த ரௌடிகளின் தற்போதைய நிலை என்ன? என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதில் சில ரௌடிகள் அடியாட்களை வைத்துக் கொண்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்பட சிலரை மிரட்டி பணம் கேட்பதால் அவர்களின் விவரங்களையும் காவலாளர்கள் சேகரித்து வருகின்றனர்.

இதனிடையே ஓசூர் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் காவலாளர்கள் பங்கேற்றக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பேசிய காவலாளர்கள், “குடியிருப்புப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நபர்கள் சுற்றினால் காவலாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ரௌடிகள் யாரேனும் மிரட்டினாலோ, பணம் கேட்டாலோ உடனடியாக காவலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் முக்கிய இடங்களில் கட்டாயம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்திட வேண்டும்” என்றுத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: கார் விபத்து - நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!