அரசு பள்ளியில் சேர்ந்தால் தங்க காசு...! அற்புத வாய்ப்பு...!

 
Published : Apr 25, 2018, 05:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
அரசு பள்ளியில் சேர்ந்தால் தங்க காசு...! அற்புத வாய்ப்பு...!

சுருக்கம்

If we join in govt schoo we can get the 1 gram coin

அரசு பள்ளியில் சேர்ந்தால் தங்க காசு...! அற்புத வாய்ப்பு...!

பேராவூரணி அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு ஒரு கிராம் தங்க காசும், பெற்றோர்களுக்கு ரூ.1000 ரூபாய் ஊக்கத்தொகையும் கிராம மக்கள் வழங்கினர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள யூனியன் நடுநிலை பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருந்துள்ளது

இதன் காரணமாக இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப் பட முடியவில்லை. இதனை தொடர்ந்து இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிகையை உயர்த்த முடிவு செய்தனர் அந்த ஊர் மக்கள்

அதன்படி, பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு  வரை சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்கக்காசும்  பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகையாக RS.1000 ரூபாயும் வழங்க முடிவு செய்தனர்

இது குறித்த அறவிப்பு, சுற்றி இருக்கும் கிராமபுரங்களில் அங்குள்ள இளைஞர்கள் மூலம் பரவ, 15 மாணவர்கள் புதிதாக பள்ளியில்  சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க காசும், பெற்றோர்களுக்கு ரூ.1000  வழங்கப்பட்டது

மேலும் விடுமுறைக்கு முன்பாகவே,மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும்  என்பதற்காக இவ்வாறு செய்து வருகின்றனர்அந்த ஊர் மக்கள். இந்த தகவலால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த பள்ளியில் படிக்க வைக்க ஆர்வம் காட்டுகின்றனர்

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!