
ஜெயலலிதா தான் தனது என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அப்போலோ மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது
பெங்களூரில் உள்ள அம்ருதா, "நான் தான் ஜெயலலிதாவின் மகள், இதனை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனைக்கு தயார்,அதற்கான மரபணு ரத்த மாதிரி அப்போலோ மருத்துவமனையில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார்.
பின்னர் இது குறித்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் குறித்த விவரங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என அப்போலோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது
ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு அம்ருதா தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.