15 நாள்களுக்குள் அகற்றாவிட்டால் சாராயக் கடையை அடித்து நொறுக்குவோம் – மக்கள் தீர்ப்பு

 
Published : May 18, 2017, 09:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
15 நாள்களுக்குள் அகற்றாவிட்டால் சாராயக் கடையை அடித்து நொறுக்குவோம் – மக்கள் தீர்ப்பு

சுருக்கம்

If we do not stay within 15 days we will beat the alcoholic shop - the judgment of the people

கடலூர்

நெய்வேலியில் டாஸ்மாக் சாராயக் 15 நாள்களுக்கு அகற்றாவிட்டால் சாராயக் கடையை அடித்து நொருக்குவோம் என்று காவலாளர்களிடத்தில் மக்கள் மென்மையாக எடுத்துரைத்தனர்.

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொள்ளிருப்பு ஊராட்சியில் கைக்கிளார்குப்பம் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் டாஸ்மாக் சாராயக் கடை இயங்கி வந்தது.

இந்த டாஸ்மாக் கடையினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி இந்த கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் சாராயக் கடையை ஊராட்சியில் இருந்து அகற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியர், கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை கடையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக்கோரி நேற்று முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக கைக்கிளார்குப்பம் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை கலால் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையில் தெர்மல் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலாளர்கள் பிரச்சனைக்குரிய டாஸ்மாக் சாராயக் கடை முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிடுவதற்காக கைக்கிளார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கடை முன்பு திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் 15 நாள்களுக்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் துணை காவல் கண்கானிப்பாளர் குமார் தெரிவித்தார்.

ஒருவேளை, 15 நாள்களுக்குள் அகற்றாவிட்டால் கடையை அடித்து நொறுக்குவோம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரங் கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
இளைஞர்களின் வாக்கை பறிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட திமுக.. எங் லுக்கில் மாஸ் காட்டும் ஸ்டாலின் #VibeWithMKS