இருக்குற சாராயக் கடையை மூட சொன்னால் புது சாராயக் கடை திறப்பு; கடுப்பான மக்களிடம் வெடித்தது போராட்டம்...

 
Published : Nov 28, 2017, 07:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
இருக்குற சாராயக் கடையை மூட சொன்னால் புது சாராயக் கடை திறப்பு; கடுப்பான மக்களிடம் வெடித்தது போராட்டம்...

சுருக்கம்

If the shop closes the shop the opening of the new Alcohol Store Struggle to the Strong People ...

சிவகங்கை

திருப்பத்தூரில் ஏற்கன்வே இருக்கும் சாராயக்  கடையை மூடச்சொல்லி மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் புதிய சாராயக் கடையை  திறந்து மக்களை கடுப்பேற்றியதால் மக்களிடையே  போராட்டம் வெடித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டியில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு, பேருந்து நிலையம், கோவில், வங்கி மற்றும் பள்ளிகள் அருகில் இந்த டாஸ்மாக் சாராயக் கடை இருப்பதால் இந்தக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கீழச்சிவல்பட்டி அருகே ஆவினிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தியதால் அந்த சாராயக் கடையை மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தியது.

தற்போது ஆவினிப்பட்டியில் அப்புறப்படுத்தப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைக்கு பதிலாக கீழச்சிவல்பட்டியில் புதிய சாராயக் கடையை மாவட்ட நிர்வாகம் திறந்துள்ளது. இது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கீழச்சிவல்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், புதிய சாராயக் கடை திறப்பது மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்கும் செயலாக அமைந்துவிட்டது.

அதனால், சாராயக் கடை அமைக்கப்பட்டதை கண்டித்து சுவரொட்டிகள் மூலம் தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மனு கொடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று கீழச்சிவல்பட்டி பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்ட மக்கள் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கீழச்சிவல்பட்டி, கால்வாய் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடத்தினர்.

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடையடைப்பு செய்தனர். போராட்டத்தில் காங்கிரசு சார்பில் மாவட்டச் செயலாளர் பழனியப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமணிகண்டன், வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மாணிக்கம், பா.ஜ.க. ஒன்றியச் செயலாளர் அடைக்கப்பன், வர்த்தக சங்கத் தலைவர் முருகப்பன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், கார், வேன் ஓட்டுனர்கள் சங்கத்தினர் உள்பட பலர்  பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!