தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

Published : Jun 06, 2023, 05:37 PM IST
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

சுருக்கம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் அவ்வப்போது ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த மே மாதம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிகளவில் மாற்றப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, போக்குவரத்துத் துறை செயலாலர் பணீந்திரரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் துறைக்கு கூடுதல் தலைமை செயலாளர் என்ற தற்காலிக பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் தலைமை செயலாளர் அந்தஸ்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள இந்த பதவி, ஒராண்டிற்கு மட்டும் அமலில் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. அந்த பதவிதான் பணீந்திரரெட்டியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

புவியியல் மற்றும் கனிமவளத் துறை இயக்குநராக நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை ஆணையராக சண்முக சுந்தரமும், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புத் துறை ஆணையராக ஜெயகாந்தனும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ரத்னாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநராக சிம்ரன்ஜித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலசந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!