மாணவர்களே... நாங்க இருக்கோம் 9677208927 நம்பருக்கு கால் பண்ணுங்க... அரசியல்வாதிகளை அல்லு தெறிக்கவிட்ட IAS & IPS அதிகாரிகள்!

 
Published : May 04, 2018, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
மாணவர்களே... நாங்க இருக்கோம் 9677208927 நம்பருக்கு கால் பண்ணுங்க... அரசியல்வாதிகளை அல்லு தெறிக்கவிட்ட  IAS & IPS அதிகாரிகள்!

சுருக்கம்

IAS and IPS officers are going to help write the exam and help students

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவ தமிழர்கள் ஒன்றாக கரம் கோர்த்து இருக்கிறார்கள். பயண செலவு தொடங்கி தங்குமிடம், உணவு வரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உதவி கரம் நீட்ட முன்வந்துள்ள நிலையில் கேரளா மற்றும் ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் அங்குதான் எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்குவேறு மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியுள்ளது.  இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ராஜஸ்தான், கேரளா, குஜராத், உபி எல்லாம் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலைமை உருவாகி உள்ளதால் பல்வேறு தரப்பினர் ஏழை மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

இன்று ட்வீட் போட்ட தினகரன், கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கேரளாவிற்று தேர்வெழுத செல்லும் மாணவர்களுக்கு உதவுவதாக அறிக்கை விட்டார்.

இதனையடுத்து, நடிகர் பிரசன்னா இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் அல்லது வசதி இல்லாத மாணவர்களில் குறைந்தது 2 உதவி செய்வதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். அதேபோல நடிகர் அருள்நிதி போக்குவரத்து, தாங்கும் இடம் மற்றும் உணவு என மாணவர்களுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

இவர்களை அடுத்து,  கேரளா மற்றும் ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் முன்வந்துள்ளனர். உதவி தேவைப்படும் மாணவர்களே உடனடியாக 9677208927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் உதவிகளை பெறலாம். மேலும், உதவி தேவைப்படும் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கட், தேர்வு எழுத்தும் மையம் என தகவல்களை சொன்னால் போதும் உடனடியாக டிக்கட் வந்து சேரும் என தெரிவித்துள்ளனர்.

"நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு ரூ.1,000 முன்பணம் வழங்க முடிவு" செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களிடம் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டையை காட்டி, பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியான நிலையில் இப்படி நல்ல உள்ளம் படைத்த அதிகாரிகள் வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி