சைதை துரைசாமியின் ஐஏஎஸ் அகடாமி மாணவி மர்மச்சாவு - சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகை

 
Published : May 21, 2017, 04:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
சைதை துரைசாமியின் ஐஏஎஸ் அகடாமி மாணவி மர்மச்சாவு - சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகை

சுருக்கம்

IAS academy student death

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த சேலம் கேம்ப் பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி அருள்அழகி. இவர்களது மகள் மகள் காயத்ரி (23).  தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

காயத்ரிக்கு, கலெக்டராக வேண்டும் என ஆர்வம் இருந்தது. இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மகளின் விருப்பப்படி மத்திய  சிவில் சர்வீஸ் தேர்வு எழுத நாகராஜ் சம்மதித்தார்.

இதற்காக சென்னை மாநகர் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின்  மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியில், காயத்ரி கடந்த ஆண்டு ஜூன் மாதம்  சேர்ந்தார். அகாடமியின் அருகிலுள்ள தனியார் விடுதியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், காயத்ரியின் தந்தை நாகராஜி,  மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி  ஊழியர் ஒருவர் போன் செய்தார். காயத்ரி  உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனே சென்னைக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நாகராஜ், பதறியடித்து கொண்டு சென்னை வந்தனர்.

அப்போது, அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்த்ரி அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடன் 3 மாணவிகள் இருந்தனர். அவர்களிடம், நாகராஜ் விசாரித்தபோது, விஷம் குடித்ததாக  தெரிவித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காயத்ரி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, மகளின் இறப்புக்கான காரணம் தெரிய வேண்டும், எனவே உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுங்கள் என்று பெற்றோர் கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், சடலத்தை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி விரட்டியனுப்பினர்.

இதுபற்றி அறிந்த நாகராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேலம் - தொப்பூர் - பவானி மெயின் ரோட்டில் திரண்டனர்.

நேற்று மதியம் சுமார் மதியம் 1மணிக்கு அந்த வழியாக  வந்த ஆம்புலன்சை மறித்து, சடலத்தை இறக்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.

தகவலறிந்து மேட்டூர் டிஎஸ்பி தினகரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.

ஆனால் ‘‘காயத்ரியின் இறப்பில் மர்மம் உள்ளது. சைதை துரைசாமி, தனது செல்வாக்கை பயன்படுத்தி அதை மூடி மறைக்க முயற்சிக்கிறார். எங்களுக்கு நீதி  கிடைக்கும் வரை, ஆம்புலன்சில் இருந்து சடலத்தை கீழே இறக்க மாட்டோம்” என்று கூறி மறியலை தொடர்ந்தனர்.

சுமார் 3மணி நேர போராட்டத்திற்கு  பிறகு, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மாணவியின் சடலம், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 2நாட்கள் மருத்துவமனையில் இருந்த காயத்ரி சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாமல் அவசரவசரமாக உடலை மருத்துவமனை நிர்வாகம் சொந்த ஊரான சேலத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காயத்ரியின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரேத பரிசோதனையை, தங்களின் வழிகாட்டுதல்படி, உரிய மருத்துவர்களை வைத்து நடத்த வேண்டும். அதுவரை சடலத்தை வாங்கமாட்டோம் என்று கூறி மருத்துவமனை முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

PREV
click me!

Recommended Stories

சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!