சோனியா காந்தி விரைவில் நலமடைய வேண்டுகிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்..

Published : Jun 02, 2022, 04:27 PM IST
சோனியா காந்தி விரைவில் நலமடைய வேண்டுகிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்..

சுருக்கம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமமைடைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா அளித்த பேட்டியில், "சோனியா காந்தி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனையின்படி அவர் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். " என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமமைடைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பதிவில், " கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி விரைவில் பூரண குணமடைய வேண்டும். தொற்றுநோய் இன்னும் நீங்காததால், பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Sonia Gandhi tested Covid positive: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..!

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்