தனிமையில் உல்லாசமாக இருந்தோம்... 2வது திருமணம் பண்ண சொல்லி மிரட்டினாள்... கொன்று எரித்தேன்! கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

 
Published : Jun 04, 2018, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
தனிமையில் உல்லாசமாக இருந்தோம்... 2வது திருமணம் பண்ண சொல்லி மிரட்டினாள்... கொன்று எரித்தேன்! கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

சுருக்கம்

I was killed because I was forced to marry a young girl in a burning case

இளம்பெண் உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்யச் சொன்னதால் அடித்துக்கொன்று சடலத்தை எரித்ததாக கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிகாலை போலீசார் ரோந்து சென்றபோது, பழவேலி மலையடிவாரம் அருகே தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த சிலர் ஓடினர். சம்பவ இடத்தில் இளம்பெண் சடலம் எரிந்து கொண்டிருந்தது. போலீசார் தீயை அணைத்து, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். அருகில் ஒரு சூட்கேசும், அதில் சுடிதார் மற்றும் சேலைகள் கிடந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து, மாயமான பெண்கள் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் அடுத்த சத்யா நகரை சேர்ந்த அருள்தாஸ் - ஜெயந்தி தம்பதி, நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, பிணவறையில் இருந்த இளம்பெண் சடலத்தை பார்த்த அவர்கள், அடையாளங்களை பார்த்து, சில நாட்களுக்கு முன் மாயமான தங்களது மகள் பொக்கிஷம் மேரி என்பதை உறுதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பொக்கிஷம் மேரி, திருமணமாகாதவர். 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் வசித்த பகுதியில் குடிநீர் பிரச்னை, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி, சத்யா நகரில் புதிதாக அமைய இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக, 27ம் தேதி டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். 

இதற்கிடையில், அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், பொக்கிஷம் மேரியை தனியாக அழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே, பொக்கிஷம் மேரியின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி பாலா  என்பவர் கடைசியாக பேசியது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை நேற்று முன்தினம் மாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அவர் அளித்த வாக்குமூலம்; நானும், மேரியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தோம். அப்போது, திருமணம் செய்யும்படி மேரி வற்புறுத்தி வந்தார். ஆனால், எனது பெற்றோர் நமது காதலை ஏற்க மறுப்பதாக, சமாளித்து வந்தேன். இதனிடையே கடந்த 8 மாதங்களுக்கு முன், பெற்றோர் பார்த்த பெண்ணுடன் எனக்கு திருமணம் நடந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த மேரி என்னுடன் தகராறில் ஈடுபட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும் சகஜமாக அவர் பேச ஆரம்பித்தார். அடிக்கடி இருவரும் சந்தித்து, தனிமையில் உல்லாசமாக இருந்தோம். அப்போது, தன்னை 2வது திருமணம் செய்துகொள்ளும்படி அவர் வற்புறுத்தினார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி என்னை செல்போனில் தொடர்புகொண்ட மேரி, உன்னை நேரில் சந்திக்க வேண்டும், என்றார். நான், எனது நண்பர் ஒருவரின் அறைக்கு அவரை வரவழைத்தேன். அங்கு ஒரு சூட்கேசில் துணி மணிகளுடன் வந்த மேரி, ‘நான் இனிமேல் எனது வீட்டிற்கு செல்ல மாட்டேன், என்னை திருமணம் செய்துகொள், இல்லையெனில் உனது மனைவியிடம் இதுபற்றி கூறிவிடுவேன், போலீசில் புகார் அளிப்பேன்,’ என என்னை மிரட்டினார். எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்போது ஆத்திரமடைந்த நான், அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து மேரி தலையில் அடித்தேன். இதில், மயங்கி விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான், உடனடியாக கடைக்கு சென்று பெரிய சூட்கேஸ் ஒன்றை வாங்கி வந்து, அதில் சடலத்தை அடைத்து, நண்பர் ஒருவரின் காரில் வைத்து, செங்கல்பட்டு கொண்டு சென்றேன். அங்கு, மலையடிவாரத்தில் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் குறைந்த பின்னர் சடலத்தை எரித்தபோது, வெளிச்சத்தை பார்த்து ரோந்து போலீசார் அங்கு வந்தனர். இதனால், அங்கிருந்து தப்பினோம். ஆனால், போலீசார் விசாரணையில் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, பொக்கிஷம் மேரி சடலம் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணா நகர் போலீசாரிடம் பாலாவை ஒப்படைத்தனர். போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   

நண்பனின் அறைக்கு மேரியை வரவழைத்த பாலா, அங்கு ஏற்பட்ட தகராறில் அடித்து கொன்ற எரித்ததாக  வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு தனி நபர் பெண்ணை கொன்று, சூட்கேசில் அடைத்து பல கிலோ மீட்டர் காரில் கொண்டு எரிப்பது சாத்தியம் இல்லை. எனவே, இவருக்கு துணையாக நண்பர்கள் செயல்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணையில், பாலா கூட்டாளிகளின் விவரத்தை மறைத்துள்ளார். இதனால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கி உள்ளனர். அவர் காரில் சென்ற வழியில் பொருத்தப்பட்டுள்ள “சிசிடிவி”யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!