ஒருநாள் ஊக்கை விழுங்கிவிட்டேன்... கொளத்தூரில் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட முதல்வர்

By SG Balan  |  First Published Jul 1, 2023, 8:24 PM IST

கொளத்தூரில் பாலம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் தன் குழந்தைப் பருவ நினைவுகளுடன் கோடம்பாக்கம் பாலம் உருவான கதையைத் தெரிவித்தார்.


சென்னை கொளத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குழந்தைப் பருவ ஞாபகங்களை நினைவுகூர்ந்து, கோடம்பாக்கத்தில் பாலம் கட்டப்பட்ட பின்னணியை கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நலத்திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய முதல்வர் பாலம் திறப்பு தொடர்பாக பசுமையான நினைவு ஒன்றை மறக்கவே முடியாது என்று கூறி தன் குழந்தைப் பருவ ஞாபகங்களைப் பகிர்ந்துகொண்டார்.

Tap to resize

Latest Videos

"அப்போது நாங்கள் கோடம்பாக்கத்தில் வசித்து வந்தோம். இப்போது உள்ள கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட் இருந்தது. பெரிய பெரிய நடிகர்கள், விஜபிக்கள் எல்லாம் நின்று காத்திருந்துதான் செல்லவேண்டும். அப்போது நான் கைக்குழந்தையாக இருந்தபோது, ஒருநாள் வீட்டில் கீழே திறந்த நிலையில் இருந்த ஊக்கை வாயில் போட்டு விழுங்கிவிட்டேன்." என்றார்.

மனிதாபிமானம் செத்துருச்சு! தூங்கும் பயணிகளை தண்ணீரைக் கொட்டி எழுப்பும் ரயில்வே போலீஸ்!

தொடர்ந்து பேசிய அவர், "அந்த ஊக்கை எடுக்க வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் என்னவெல்லாமோ செய்தார்கள். ஆனால் முடியவில்லை. அதனால் மருத்துவமனைக்குக் கூட்டுச் செல்ல முடிவு செய்து காரில் அழைத்துச் சென்றார்கள். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டைக் கடக்க காத்திருந்து, பின்புதான் மருத்துவமனைக்குச் செல்ல முடிந்தது. அப்போதுதான், கலைஞர் அவர்கள் இந்த இடத்தில் ஒரு பாலம் கட்டினால் என்ன என்று யோசித்து முடிவு செய்தார்" என கோடம்பாக்கம் பாலம் உருவான கதையைத் தெரிவித்தார். இந்த நிகழ்வுகளை எல்லாம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தனது சுயசரிதை நூலான 'நெஞ்சுக்கு நீதி'யில் விவரித்துள்ளார் எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

கொளத்தூர் தொகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1 கோடி செலவில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறைக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இந்த வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் உருவாகியுள்ளன.

மணிப்பூருக்கு நான் கேரண்டி! அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தில்லான அறிவிப்பு

கௌதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் பூங்கா, பகுதி நேர நூலகம் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டிருகுகம் மேம்பாலத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தப் பாலத்திற்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோதுதான் முதல் முதலாக ஒரு மாநகராட்சி சார்பில் பாலங்கள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். திராவிட மாடல் அரசு நாளைய தேவைகளையும் மனதில் வைத்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது என்று கூறினார்.

செங்கை சிவம் பெயரில் அமைந்த பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய முதல்வர், செங்கை சிவம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னூதாரணமாக இருந்தார் என்றும் பாராட்டினார். 

நாளைய தேவையை மனதில் வைத்து செயல்படுகிறோம்: கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

click me!