ஜூலியின் கட்சியில் சேர எனக்கு தகுதி இல்லை... அனுபவமும் இல்லை...! கண்டமேனிக்கு கலாய்த்த கஸ்தூரி

 
Published : May 22, 2018, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
ஜூலியின் கட்சியில் சேர எனக்கு தகுதி இல்லை... அனுபவமும் இல்லை...! கண்டமேனிக்கு கலாய்த்த கஸ்தூரி

சுருக்கம்

I do not deserve to join the party of Julie - Kasturi

ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தானும் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார்.

ஜூலியின் அரசியல் அறிவிப்பை பார்த்தவர்கள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். ஜூலி, தயவு செய்து அரசியலுக்கு வந்து விடாதீர்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஜூலியின் ஆதரவாளர்கள் சிலரோ, நீ வா தலைவி பார்த்துக் கொள்ளலாம் என்கிற வகையில் அவரை அரசியலுக்கு வரவேற்றும் சிலர் கருத்து பதிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரிக்கு, ஜூலியின் ரசிகர் ஒருவர், நீங்கள் ஜூலியுடன் அரசியலுக்கு வந்தால் உங்களை முதலமைச்சராக்குவோம் என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதற்கு நடிகை கஸ்தூரி, ஜூலியின் ஆதரவாளருக்கு, தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டு.. என்று பதில் அளித்துள்ளார்.

ஜூலியை நடிகை கஸ்தூரி தனது பாணியில் கிண்டலடித்துள்ள நிலையில், ஜூலியின் ஆதரவாளர்களோ, எங்கள் தலைவியை ஆளாளுக்கு கலாய்க்கிறீர்களே... என்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டுவிட்டியுள்ளனர். ஆனால், ஜூலியை கலாய்த்து வருபவர்களோ, நடிகை கஸ்தூரியின் டுவிட்டைப் பார்த்து விட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்