கிண்டியில் கள்ளக்காதலனை ஏவி கணவன் கொலை - மனைவியை கைது செய்யாத போலீசார் சிக்குகின்றனர்..

 
Published : Jun 30, 2017, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
கிண்டியில் கள்ளக்காதலனை ஏவி கணவன் கொலை - மனைவியை கைது செய்யாத போலீசார் சிக்குகின்றனர்..

சுருக்கம்

husband killing wife caught in police

கிண்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்த வழக்கில் 25 நாட்களுக்கு பிறகு மனைவி கைது செய்யப்பட்டார். அவரை வழக்கில் சேர்க்காமல்  காப்பாற்றிய போலீசார்  மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஜோதி நகரைச் சேர்ந்தவர் உதயபாலன். இவரது மனைவி உதயகலா. தொழிலதிபரான உதயபாலன், எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

உதயலேகா தனது 3 பெண் குழந்தைகளுடன் ஜூன் முதல் வாரம் காரைக்கால் சென்றிருந்தார். இந்த நிலையில், உதயபாலன் 4 ஆம் தேதி தனது வீட்டு படுக்கையறையில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

கொலைப்பற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உதயபாலனை கொலை செய்தவர்கள் நகையை திருடி சென்றிருந்தனர். கண்காணிப்பு கேமராவில் தண்ணீரை  ஊற்றிவிட்டு சென்றனர். 

இதில் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய உதயபாலனின் கார் ஓட்டுனர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். பிரபாகரனை நகைக்காக் அவர் கொலை செய்தது போல் போலீசார் வழக்கை  முடித்துவைத்தனர். பிரபாகரன் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது மகன் கொலையில், சந்தேகம் இருப்பதாக உதயபாலனின் தந்தை சதாசிவம் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். கொலை வழக்கை சரியாக விசாரிக்க வில்லை என அவர் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் முதல் கட்ட விசாரணையில் உதயபாலனின் மனைவிக்கும் கொலையில் தொடர்பிருந்ததாக தெரியவந்தது. 

 இதையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றபிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறையில் இருந்த பிரபாகரனை விசாரித்த போது அவன் கூறிய விஷயங்கள் போலீசாரை திடுக்கிட வைத்தது. உதயபாலனின் மனைவி உதய லேகாவுக்கும் தனக்கும் இருந்த கள்ள தொடர்பு காரணமாக கணவனை வெறுத்த உதய லேகா கேட்டு கொண்டதன் பேரில் கொலை செய்ததாகவும் கொலைசெய்தால் தான் காப்பாற்றுவதாக கூறியதால் கொலை செய்ததாகவும் கூறியுள்ளான்.

இதையடுத்து உதயலேகாவை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கணவனின் முறையற்ற தொடர்புகள் , நடத்தை சரியில்லாததால் தங்களுக்குள் பிரச்சனை வரும் என்றும் அப்போது கணவரின் கார் டிரைவர்  பிராபகர் தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் இருவரும் ரகசியமாக தனிமையில் பல இடங்களில் சுற்றித்திரிந்ததாகவும் கூறியுள்ளார். கணவனின் சொத்துக்கள் மீது ஆசைப்பட்ட பிரபாகர் கணவனை கொலை செய்தால் தாம் நன்றாக வாழலாம் என்று கூறியதை நம்பி கொலை செய்ய ஒத்து கொண்டதாகவும் கொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்பே தாம் தாய்விட்டிற்கு சென்றுவிட்டதாகவும் அதன் பின்னர் டிரைவர் பிரபாகர் தனது கணவரை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் கிண்டி போலீசார் பிரபாகரை மட்டும் கைது செய்துள்ளனர். மனைவி கொலைக்கு உடந்தை என்பதை மறைத்து ஆதாய கொலை போல் காண்பித்து வழக்கை முடித்துள்ளது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வழக்கை வேறு திசையில் விசாரித்து குற்றவாளியை காப்பாற்றியதாக கிண்டி போலீசார் கூண்டோடு சிக்குகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!