
திருச்சியில், மனைவி கண் முன்னே கணவன் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை அடுத்த திருப்பஞ்சலி கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன்.
இவரின் மனைவி நந்தினி. ஆட்டோ ஓட்டுநரான கதிரேசன், அதே பகுதியில் உள்ள தங்கராசு என்பவரின் தோட்டத்தில் பிளாஸ்டிக் குழாய்களை உடைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கதிரேசனுக்கும், தங்கராசுக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தங்கராசு தோட்டத்தில் இருந்த பிளாஸ்டி குழாய் மீண்டும் உடைக்கப்படுள்ளது.
இதைப் பார்த்த தங்கராசு, கோபத்துடன், கதிரேசன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு கதிரேசனை, அவர்கள் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இதைனை கதிரேசனின் மனைவி நந்தினி தடுக்க முயன்றுள்ளார். அவரையும் கதிரேசன் மற்றும் அவரது மகன் தாக்கியுள்ளனர்.
அடித்து உதைத்து இழுத்துச் செல்லப்பட்ட கதிரேசனை, தங்கராசு கொலை செய்து, பின்னர் அவர்கள் தலைமறைவாக இருந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார், கதிரேசனின் உடலை மீட்டனர். மேலும், இது தொடர்பாக தங்கராசு, அவரின் மகன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவர்கள் மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி கண்முன்னே கணவன் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.