
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக அறுத்துக் கொலை செய்த சம்பவம் பேசும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டியருகே கொண்டமநாயக்கன்பட்டி சத்யா காலனியில் வசிக்கும் சிவமுருகன் பிரியா தம்பதியினர் வசித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக மனைவி பிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் சிவமுருகன் இன்று காலை பிரியாவை கத்தியால் கழுத்தை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கழுத்து அறுபட்டநிலையில் ரத்தவெள்ளத்தில் சரிந்த பிரியா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியாவின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பிறகு கைது கொலை செய்த கணவன் சிவமுருகனை ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.