தினக்கூலியை உயர்த்தி கேட்டு தேனியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

Asianet News Tamil  
Published : Jun 21, 2018, 01:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
தினக்கூலியை உயர்த்தி கேட்டு தேனியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Power Board employees demonstration asking increase daily wage ...

தேனி

தினக்கூலியை உயர்த்தி தரக்கோரி தேனியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனியில் மின் ஊழியர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நேற்று தேனி மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திட்டத் தலைவர் பி. முருகேசன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலர் எம். ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக் கூலி வழங்க வேண்டும், 

விரிவாக்கப் பணிகளை ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும், 

ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும், 

அவர்களை தினக் கூலி ஊழியர்களாகப் பணியமர்த்த வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!