மனைவி காணாமல்போனதால் மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை; காஞ்சிபுரத்தில் சோகம்...

 
Published : Jun 14, 2018, 08:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
மனைவி காணாமல்போனதால் மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை; காஞ்சிபுரத்தில் சோகம்...

சுருக்கம்

husband hang and suicide for wife missing Kanchipuram tragedy ...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி காணாமல் போனதால் மனமுடைந்த கணவன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் இரட்டைமங்கலம் கிராமம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அன்பு (50). இவரது மனைவி அமுல் (45). இவர்களுக்கு சுமித்ரா என்ற மகள் உள்ளார்.

மனைவி அமுலுக்கு மனநலம் சரியில்லையாம். அதனால், அவர் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவாராம்.  காணாமல்போகும் மனைவியை தேடி கண்டுபிடித்து அன்பு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவாராம். இதனால் விரக்தியில் அவர் குடிபழக்கத்திற்கு ஆளானார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல அமுல் திடீரென காணாமல் போய்விட்டார். அவரைத் தேடி பார்த்த அன்பு மனைவி கிடைக்காததால் மனமுடைந்தார். அதன் விளைவு அதிகமாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். 

வீட்டில் கதறி அழுதுக் கொண்டிருந்த அவர் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்து அவரது மகள் சுமித்ரா அலறினார். 

பின்னர், அக்கம்பக்கதினர் இது குறித்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். உதவி ஆவ்யாளர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்புவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். 


 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!