
2G 2G னு மட்டும் சொல்றீங்களே.. இன்னிக்கு போன்ல இலவசமா பேசறோம்ல...
கடந்த 6 ஆண்டுகளாக 2ஜி அலைகற்றை குறித்து தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த வழக்கு இன்றுடன் முடிவு வந்தது.இந்த வழக்கிலிருந்து,கனிமொழி மற்றும் ராசா விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து,பல அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கருது தெரிவித்து வந்தாலும், திமுக ஆதரவாளர்கள் தீர்ப்பு குறித்து புது புது விளக்கத்தை அளித்து வருகின்றனர்
அதில் திமுக ஆதவாளர் ஒருவர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா..?
அதில்......
“ஒன்னுமே தெரியாம பேசக்கூடாது...
இன்னைக்கு நம்ம எல்லாரும் இவ்வோளோ மலிவா இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு காரணம் அன்றைக்கு அண்ணன்ராச கொண்டுவந்த
திட்டங்கள் மற்றும் டென்டர்கள்...இது பிரதமர்
பார்வையில் தான் நடந்தது...இன்றைய ஜியோ
அன்றைக்கு அனுமதி வாங்கியவர்கள்தான்..
ஆனால் அவர்கள் தொழிலை தொடங்கியது
6 ஆண்டுகள் கழித்து...
இதுக்கு முன்னாடி நம்ம 1 கால்க்கு 1 ரூபாய்க்கு
பேசிருக்கோம்...
ஆனா இன்றைக்கு இலவசமா பேசுரோம்னா..
அதுக்கு அன்னைக்குஅண்ணன் ராச எடுத்த முயற்ச்சி தான்...இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது உண்மைதான்...தவிற ஊழல் எங்கும், எதிலும் நடக்கவில்லை....
நீதி வென்றிருக்கிறது..”
இந்த கருத்திற்கு திமுக தொண்டர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.