முன்னேற்றம்னா எப்படி இருக்கணும் தெரியுமா? ஆட்சியர் சொல்கிறார் கேளுங்க...

Asianet News Tamil  
Published : Jun 04, 2018, 08:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
முன்னேற்றம்னா எப்படி இருக்கணும் தெரியுமா? ஆட்சியர் சொல்கிறார் கேளுங்க...

சுருக்கம்

how to improve explain by collector

திருவண்ணாமலை

விவசாயத்தை முன்னிலைபடுத்தி அதற்கு தகுந்தாற்போல் விவசாயத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று கல்லூரி விழாவில் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் 4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. 

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, கல்லூரியின் முன்னாள் முதல்வர் பிரசாத், மாணவர் நல அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் தங்கபாண்டியன் வரவேற்றார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி பங்கேற்று பேசினார்.

அதில், "வேகமாக செல்லும் இந்த காலத்தில் அதற்கு தகுந்தாற்போல் உங்களை தயார்படுத்தி முன்னேற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டும். 

விவசாயத்தை முன்னிலைபடுத்தி அதற்கு தகுந்தாற்போல் விவசாயத்தில் முன்னேற்றம் காண வேண்டும். படிப்புகளில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வேளாண்மை மாணவர்களாகிய நீங்கள் விவசாயத்தை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் முன்னேற்ற வேண்டும்.

விவசாயிகளைவிட சிறந்தவர்கள் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. அவர்களுக்கு என்ன பிரச்சனைகள் உள்ளது என்று நன்கு அறிந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். 

மாணவர்களாகிய நீங்கள் படித்த புத்தகத்தை பாதுகாத்து வையுங்கள். அதனை மீண்டும் படித்து பாருங்கள். நீங்கள் முன்னேறுவதற்கு நன்றாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

இந்த விழாவில் மாணவர் பிரதிநிதி சந்தோஷ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

விழாவின் முடிவில் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஜமுனா நன்றித் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்