ஸ்கெட்ச் போட்ட கேங் லீடர்... அலேக்காக அள்ளியது எப்படி?  இதோ சுவாரஷ்யமான தகவல்...

First Published Feb 7, 2018, 5:46 PM IST
Highlights
How the police round up rawdys birthday party area how is massive arrest possible


சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிரபல ரௌடி  பிறந்தநாள் கொண்டாடிய போது பக்காவாக ஸ்கெட்ச் போட்டு அலேக்காக அள்ளியது எப்படி?  இதோ சுவாரஷ்யமான தகவல்...

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பினு.  நேற்று பிறந்தாள். தனது பிறந்தநாளை சக ரவுடிகளுடன் சினிமாவையே மிஞ்சும்வு அளவிற்கு செய்திருந்தார் பினு. இதைத்தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையிலுள்ள முக்கிய ரவுடிகள் அனைவருக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு ரவுடிகள் அனைவரும் மலையம்பாக்கத்தில் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் வைத்து பிரபல தாதா பினுவின் பிறந்த நாள் விழாவுக்கு அவருடைய கூட்டாளிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் போல சிறப்பாக இந்த பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



ரவுடி பினுவுக்கு சக ரவுடிகள் பெரிய ரோஜாப்பூ மாலையை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து தனது பெரிய வீச்சரிவாளைக் கொண்டு ரவுடி பினு கேக்கை வெட்டி பிறந்த நாளை சினிமா பாணியில் கோலாகலமாக கொண்டாடினார். வானவேடிக்கைகள், ஆள் உயர மாலை என்று மலையம்பாக்கம் பகுதியையே அதகளப்படுத்தியுள்ளனர் ரவுடிக் கும்பல். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே இடத்தில் கூடி கும்மாளம் அடித்துள்ளனர். இந்த தகவலை மோப்பம் பிடித்த போலீஸ் மாறு வேடத்தில் சென்று ரவுடிகள் திரண்டிருந்த ஏரியாவை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த 76 ரவுடிகளையும் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினர்.



கைது செய்யப்பட்ட ரவுடிகளை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சினிமா பாணியில் ரவுடிகள் பிறந்த நாள் கொண்டாடியதும் அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சதித்திட்டம் ஏதாவது தீட்டப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், கைது செய்யபட்டவர்களில் சில வக்கீல்களும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் இருந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்து வரும் போலீசார் ரவுடிகளுடன் மாணவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ரவுடிகளிடம் நடத்தப்படும் இந்த கிருக்குப்பிடி  விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

72 ரவுடிகளை அலேக்காக அள்ளியது எப்படி?

ஒரே இடத்தில் கூடிய 72 ரவுடிகளை அலேக்காக தூக்கியது  எப்படி என்ற தகவல் சுவாரஸ்யமாகவும் சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு இருந்தது இதுபற்றி காவல் துறை உதவி ஆணையர் கண்ணன் கூறுகையில் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ரவுடிகள் ஒன்று கூடுவது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது, அங்கு சென்று எங்களின் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களை எப்படி சுற்றி வளைப்பது? ஆயுதங்கள் வைத்து தாக்க வந்தால் எப்படி சமாளிப்பது என முன்னாடியே பக்காவாக ஸ்கெட்ச் போட்டோம். அதற்காக ஒரு டீமை அமைத்து போலீஸ் வாகனத்தில் செல்லாமல் தனிப்பட்ட வாடகைக்கு கார் எடுத்து சென்றோம். ரவுடிகள் என்பதால் அவர்களும் துப்பாக்கி, ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என்று தெரிந்து நாங்களும் துப்பாக்கியுடன் சென்றோம் அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் அத்தனை பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தோம்.

இதில் சுவாரஷ்யம் என்னன்னா? நாங்கள் சுற்றி வளைக்கும் முன்பு எங்களை கண்டதும் தப்பி ஓடிய சில ரௌடிகளை வடக்கு மலையம்பாக்கம் மற்றும் தெற்கு மலையம்பாக்கம் கிராம மக்கள் பிடித்து எங்களிடம் ஒப்படைத்தார்கள்.

பினுவிற்கு பிறந்தநாள் பரிசு... என்ன தெரியுமா?

பிடிபட்ட ரவுடிகளிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், சில தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் பினுவிற்க்கு பிறந்தநாள் பரிசாக அங்கு வந்த ரௌடிகள்  மற்றொரு ரவுடியான ராதாகிருஷ்ணன் என்பவரை கொலை செய்து பிறந்தநாள் பரிசாக தர திட்டமிட்டிருந்தது தெரியவந்ததுள்ளது. ஆமாம் யார் இந்த ராதாகிருஷ்ணன் கொலை, கொள்ளை, வழிபறி ஆகிய 8 வழக்குகள் உள்ளதாம். சென்னையிலேயே நம்பர் 1 இடத்தில் ரவுடி இவர்தானாம். சென்னையில் நம்பர் ஒன் ரௌடி கேங் ஆகா இருக்க ஆசைப்பட்டு அவரை கொல்ல பினு கோஷ்டி திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இந்த தகவல் அறிந்த ராதாகிருஷ்ணன், ரௌடி பிறந்தநாள் கொண்டாட திட்டமிருந்தது. சென்னையிலுள்ள முக்கிய ரௌடிகள் மொத்தமாக எப்போது வருவார்கள் யார் யார் என்ற தகவலை முன்கூட்டியே போலீஸுக்கு தகவல் கொடுத்ததாகவும், இந்த தகவலின்பேரில்தான் போலீஸ் பினு கோஷ்டியை அலேக்காக அள்ளிக்கொண்டு வந்துள்ளது.

click me!