சிசிடிவி’யில் பிரா சாமியார்... கல்யாணமான அரைமணி நேரத்தில் காதல் ஜோடிக்கு நேர்ந்த அவலம்... தங்கை வெட்டிக் கொன்ற அண்ணன்!

 
Published : Feb 07, 2018, 04:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
சிசிடிவி’யில் பிரா சாமியார்... கல்யாணமான அரைமணி நேரத்தில் காதல் ஜோடிக்கு நேர்ந்த அவலம்... தங்கை வெட்டிக் கொன்ற அண்ணன்!

சுருக்கம்

today Special bit news in crime

தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர் காணாமல் போனது. இதனால் இதனை திருவது யார் என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டது.

பதிவான சிசிடிவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த துறவியின் பெயரை கண்டுபிடித்து அவருடன் இருக்கும் துறவிகளிடன் இதை பற்றி கேட்டுள்ளனர். அப்போது அவருக்கு உடல் மற்றும் மனதளவில் பிரச்சனைகள் இருப்பதாகவும் இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது அதை நிறுத்திவிட்டதால் இதுபோன்ற வித்தியசமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

திருமணமாகவிருந்த தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்...

திருச்சியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகள் ஹேமலதா. திருச்சி டோல்கேட் அருகில் உள்ள கீரமங்கலம் குடித்தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியனுக்கும்  ஹேமலதாவின் அண்ணனுக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பதாரிடையேயும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவசுப்பிரமணியனின் மகள் ஹேமாவிற்கு, இன்று நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதனையறிந்த சிவசுப்பிரமணியனின் அண்ணன் மகனான சக்திகுமார் நேற்றிரவு, சிவசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சக்திகுமார், சிவசுப்பிரமணியனை தான் கொண்டு வந்த கத்தியால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து சண்டையை தடுக்க போன ஹேமாவையும், சிவகுமார் சரமாரிய கத்தியால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ஹேமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சிவகுமாரை கைது செய்தனர். ஹேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்களின் உள்ளாடைகளை திருடும் சாமியார்...

தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர் காணாமல் போனது. இதனால் இதனை திருவது யார் என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டது.

பதிவான சிசிடிவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த துறவியின் பெயரை கண்டுபிடித்து அவருடன் இருக்கும் துறவிகளிடன் இதை பற்றி கேட்டுள்ளனர்.

அப்போது அவருக்கு உடல் மற்றும் மனதளவில் பிரச்சனைகள் இருப்பதாகவும் இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது அதை நிறுத்திவிட்டதால் இதுபோன்ற வித்தியசமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

திருமணமான அரைமணி நேரத்தில் காதல் ஜோடிக்கு நேர்ந்த அவலம்...

திருமணமான 30 நிமிடத்தில் காதல் ஜோடியினருக்கு ஏற்பட்ட துயர சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் கலப்புத் திருமணங்களும் அதனால் ஏற்படும் கலவரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர், இளவரசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் காதலர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள், கடுமையான தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்திருக்கிறது.

பாபநாசத்தை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணும், ராஜேஷ்  என்பரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதல் விஷயம் அபிநயாவின் வீட்டிற்கு தெரியவே, அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அபிநயா இதனை பொருட்படுத்தாமல், ராஜேஷுடன் ஓடிப்போய் பதிவுத் திருமணம் செய்ய ரிஜிஸ்தர் ஆபிசுக்கு சென்றனர் அங்கு அவர்கள் திருமணத்தை பதிவு செய்து மாலையை மாற்றி திருமணம் செய்தனர்.  அவர்கள் திருமணம் செய்து கொண்ட விஷயம் அபிநயாயின் வீட்டாருக்கு தெரியவே, அடுத்த அரை மணிநேரத்தில் அபிநயாவின் உறவினர்கள், திருமண பதிவு அலுவலகத்திற்கு சென்று, திருமண கோலத்தில் இருந்த அபிநயா ராஜேஷை சரமாரியாக  தாக்கியுள்ளனர். இதனையடுத்து இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். நடந்ததை காவல் நிலையத்தில் புகாராக எழுதி மனு அளித்தனர். புகாரின் பேரில் அபிநயாவின் உறவினர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!