
ரெய்டுகள்” – நடந்ததும் …நடத்தி வைப்பவர்களும்..ஒரு பார்வை
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டு வந்த ஒரு மிகப்பெரிய ஆபரேஷனுக்காக, நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான வருமான வரி இலாகா அதிகாரிகளும், சாட்சிகளாக ஆவணங்களை பதிவு செய்ய இதர இலாகாக்களைச் சேர்ந்த கெசட்பதிவு பெற்ற அதிகாரிகளும், அதிக அளவில் கார் ஓட்டுநர்களும் திரட்டப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு மிகப்பெரிய ஆபரேஷனில் அவர்கள் பங்கேற்று செயல்படப்போகிறார்கள் என்பதைத்தவிர, தாங்கள் எங்கே போகப்போகிறோம் – குறி எது, யார் என்பது கடைசி சில நிமிடங்கள்வரை அவர்கள் யாருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை
மிகப்பெரிய கால்டாக்சி நிறுவனத்திடம் 150 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்னதாகவே சொல்லி வைத்து பெறப்பட்டிருக்கின்றன.யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஒரு திருமண நிகழ்ச்சிக்காக என்று சொல்லப்பட்டு, ‘Srini weds Mahi’ என்று கார்களில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு, வரிசை எண்களும் ஒட்டப்பட்டன.
“திருமணம்” நிகழவிருந்த இடத்திற்கு முதல்நாள் இரவே, 150 கார்களும் ஓட்டுநர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.
750 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, அதிகாலை 4 மணிக்கு அந்த இடத்திற்கு வந்து கூடும்படி முன் கூட்டியே உத்திரவு பிறப்பிக்கப்படுகிறது.
“ரெய்டு” செல்லும் இடத்தில் என்ன செய்ய வேண்டும், எத்தகைய தேடல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், எதை எதை எப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் எல்லாம்அந்த அதிகாலையில் தான் விவரமாக சொல்லப்படுகின்றன.
திறந்து பார்க்க அனுமதி இல்லை
பின்னர் ஒவ்வொரு குழுத்தலைவரிடமும், ஒரு சீல் இடப்பட்ட கவர் கொடுக்கப்படுகிறது. அந்த கவரின் உள்ளே, அவர்கள் ரெய்டு செய்ய வேண்டிய இடத்தில் வசிப்பவரின் பெயர், விலாசத்துடன் கூடிய “சர்ச் வாரண்ட் (search warrant ) இருக்கிறது. ஆனால், அதை உடனே திறந்து பார்க்க அவர்களுக்கு அனுமதி இல்லை.
ஒரு குறிப்பிட்ட பகுதியை, (ரெய்டு நடத்த வேண்டிய கட்டிடம் இருக்கும் ஏரியா) சென்றடைந்த பிறகு தான், அவர்கள் அந்த கவரை திறந்து பார்த்து,பின், ரெய்டு நடத்த வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.அந்த நிமிடம் வரை அவர்களுக்கு தாங்கள் யார் வீட்டில்/அலுவலகத்தில் ரெய்டு செய்யப்போகிறோம் என்பது தெரியாது….
ரெய்டு துவங்கும் முன்னர், வீட்டில் இருப்பவருக்கு, தங்களது அடையாள அட்டையை காண்பித்து, அவர்களிடம் தாங்கள் யார் என்பதை தெளிவாக தெரிவித்து விட்டு, சர்ச் வாரண்டையும் காண்பித்து விட்டு தான் தங்கள் பணியை துவக்க வேண்டும்.
தேடுதலைத் துவங்கும் முன்னர், வீட்டில் இருப்பவரிடம், தாங்கள் எதையும் கொண்டு வரவில்லைஎன்பதை பரிசோதித்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருப்பதை தெரியப்படுத்த வேண்டும்….தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்….(பின்னர் , ரெய்டு செய்தவர்களே கொண்டு வந்து வைத்தனர் ( planted ) என்கிற சந்தேகமோ, குற்றச்சாட்டோ வராமலிருக்க இந்த ஏற்பாடு.
அதே போல் வீட்டில் இருப்பவர்களை எந்தவிதத்திலும் துன்புறுத்தக்கூடாது என்பதும் கூறப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து வெளியுலகினர் யாரையும் தொடர்பு கொள்ள முடியாதபடி, தொலை தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படுகின்றன.
வெளியார் வீட்டிற்கு வருவதும், வீட்டில் உள்ளவர்கள் வெளியேறுவதும் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு குழுவும் எங்கே சென்றிருக்கிறது என்பது மற்ற குழுவினருக்கு தெரியாது. பிற மனிதர்களிடமோ, மீடியாக்களிடமோ பேசுவதிலிருந்து, ரெய்டு குழுவினர் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பிரமாதமாக திட்டமிட்டு செயலாற்றியதன் விளைவாக,ஆயிரக்கணக்கான கோடிகள் பெறுமானமுள்ள, சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள், பினாமி சொத்துக்கள், தங்க,வைர நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. பினாமி சொத்துக்கள் என்று நிரூபிக்கப்படும் சொத்துக்கள் அனைத்தையும், அரசு தன் வசம் எடுத்துக்கொள்ள சட்டம் உரிமை அளிக்கிறது.
ரெய்டுகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, அதனைப்பற்றிய விளக்கமான அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது…
இந்நிலையில் தான் தற்போது வேதா இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறை சோதனை நடத்தினர்ஹு குறிப்பிடத்தக்கது.இந்த சோதனை முடிவில் தான் என்னவெல்லாம் கைப்பற்றினார்கள் என்பது தெரியும்...