திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? முதல்வர் சொன்னது பொய்யா? இல்ல அமைச்சர் சொல்வது பொய்யா?

Published : Mar 15, 2025, 03:08 PM ISTUpdated : Mar 15, 2025, 03:13 PM IST
திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? முதல்வர் சொன்னது பொய்யா? இல்ல அமைச்சர் சொல்வது பொய்யா?

சுருக்கம்

அரசு வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களில் திமுக அரசு மோசடி செய்வதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் முரண்பாடு உள்ளதாகவும், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில்  அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும்.  சில மாதங்களுக்கு  முன் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.

நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு அவர்கள்,’’அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர்  தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில்  இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக 21,866 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்” என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ரூ. 992 கோடி ஊழல்! திமுகவுக்கு சிக்கலா? சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி!

அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நிரந்தரப் பணியாளர்கள் ஆவர். உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர்.  இவர்களின் பணி நிலை குறித்த துல்லியமான விவரத்தை வெளியிடும்படி பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது ’’ என்று கூறியிருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததற்கு பிந்தைய 8 மாதங்களில் அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாக உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.  அதை மறுக்கவில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை  13 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில்,  அரசுத் தேர்வு முகமைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு  25 ஆயிரம் உயர முடியும்?  அதேபோல், மொத்தப் பணியாளர்  எண்ணிக்கை உயரும் போது உள்ளாட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும் அல்லது அதே எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால்,  அவர்களின் எண்ணிக்கை  32 ஆயிரத்து 709-லிருந்து  21,866 ஆக  11 ஆயிரம் பேர் குறைந்தது எப்படி?

அதேபோல், வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டில் 7 பணிகளுக்கு மட்டும் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த 7 பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பேர் கூட  தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் பேரை எவ்வாறு  தேர்வு செய்ய முடியும்?

இதையும் படிங்க: தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஜாக்பாட் அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள்!

ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தெரிவித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி?  என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.  தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

4 லட்சம் ஆசிரியர்களுக்கு துரோகம்.. திமுக அரசு பழிவாங்கிவிடுச்சு.. அடுத்த ஆட்சியில் தீர்வு.. சொல்வது யார் தெரியுமா?
45+ வாக்கு வங்கி... புதிய கூட்டணியால் ஏறுமுகத்தில் அதிமுக..! 2021 தேர்தல் சொல்லும் அரசியல் கணக்கு..!