நீதிமன்றம் உத்தரவை மீறி மணல் கடத்தல் நடைபெறுவது எப்படி..? உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி..

By Thanalakshmi V  |  First Published Sep 15, 2022, 4:02 PM IST

மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும், சட்ட விரோத மணல் கடத்தல் நடைபெறுவது எப்படி என்று மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 


அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கவும், மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றவும் கோரி கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அவரது மனுவில் , "தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது.அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தொண்டி மணல்கள் திருடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளைக் கொண்டும் ஆற்றுக்கு செல்வதற்கு பாதைகள் அமைத்து ஆற்று மணலை திருடி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:‘மெட்ராஸ் ஸ்டேட்’டூ ‘தமிழ்நாடு’ அறிஞர் அண்ணாவின் முத்தான முதல் 15 சாதனைகள்...

சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கவும், மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றி உத்தரவிட வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இருந்தும் சட்ட விரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி என கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க:கைதாகிறார் சவுக்கு சங்கர்..? மதுரை உயர்நீதிமன்றத்தில் சுற்றி வளைத்த போலீஸ்..

மேலும், தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது எனக் கூறி வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

click me!