நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

Published : Mar 06, 2024, 04:30 PM IST
நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

சுருக்கம்

நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

திமுக ஆட்சி அமைந்ததில்  இருந்து ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களின் பலன்கள் பயனாளர்களை சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில், “நீங்கள் நலமா?” என்ற புதிய திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனை விமர்சிக்கும் விதமாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் நலமா” என்று கேட்கும் ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடிய ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை! நாங்கள் நலமாக இல்லை.” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

இந்த நிலையில், நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “எதிர்க்கட்சித் தலைவர் தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார்! விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? தூத்துக்குடியில்  மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

அதிமுக கூட்டணியில் இணைந்த அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்; பாஜகவுடன் சரத்குமார் கூட்டணி!

கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், திராவிட மாடல் ஆட்சியில்.” எனவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: ரூ.22,500 தள்ளுபடி… ரூ.14,999 செலுத்தினால் போதும்… எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!