School Leave: மகிழ்ச்சி செய்தி..! பள்ளிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..?

Published : Mar 07, 2022, 08:03 AM IST
School Leave: மகிழ்ச்சி செய்தி..! பள்ளிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..?

சுருக்கம்

School Leave: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து சென்னை வானிலை ஆய்வு விடுத்துள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, மேலும் வலுவிழக்கக்கூடும்.

இதனால் இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழகம்,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலஇடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 23 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியமத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மார்ச் 7-ம் தேதி (இன்று) காலை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிவிடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Tamilnadu Rains : தமிழகத்தை புரட்டி போடும் கனமழை.. எந்தெந்த இடங்கள் தெரியுமா ? வெளியான புது தகவல் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!