
தமிழ்நாடு அரசு நிதி பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையினை பணியாளர்கள் பயன்பெற மீண்டும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் சரண் விடுப்பு சலுகை தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிதி அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் சரண் விடுப்பு சலுகை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பலன் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென அரசு அலுவலகங்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அவற்றை பணிவுடன் பரிசீலித்து முதலமைச்சர், அவரின் வழிகாட்டுதலின் படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை 1.4.2026 முதல் சரண் செய்து பணப்பயன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் .இதற்குரிய அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.