இந்துக்களுக்கும் ஓட்டு இருக்கு.. திமுகவினர் அதை எப்போது மறக்க வேண்டும் - கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்!

Ansgar R |  
Published : Jan 21, 2024, 11:59 PM IST
இந்துக்களுக்கும் ஓட்டு இருக்கு.. திமுகவினர் அதை எப்போது மறக்க வேண்டும் - கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்!

சுருக்கம்

Nirmala Sitharaman : நாளை அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு முன்னிட்டு தமிழகத்தில் ராமர் பெயரால் பூஜைகள், அன்னதானம் வழங்க மற்றும் பிரசாதம் வழங்க தடை விதித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது அனைவரும் அறிந்ததே.

நாளை அயோத்தியில் பிரதமர் மோடி அவர்களுடைய முன்னிலையில் ராமர் கோயில் திறப்பு விழா விமர்சியாக நடக்க உள்ளது. உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளார். அதேபோல இந்தியா முழுவதும் பல இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ராமர் பெயரால் பூஜைகள், அன்னதானம் வழங்க, பிரசாதம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்தது. 

ஆனால் அரசு தரப்பில் இது பற்றி திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பூஜைகள் செய்யவும், அன்னதானம் வழங்கவும், பிரசாதம் வழங்கவும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டது. இருப்பினும் சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளை கொண்டு பலரும் தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களில் முன்வைத்து வருகின்றனர். 

"என்னாலும் வர முடியும்.. கட்சி கொடுத்த வண்டி இருக்கு".. திமுக இளைஞரணி மாநாடு - நெகிழவைத்த மாற்றுத்திறனாளி!

அதே போல சேலத்தில் நடந்த மாநாட்டை சீர்குலைக்கவே இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக அரசுக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட ராமர் கோவில்கள் உள்ளது. அவர்களை கொச்சைப்படுத்தும் வண்ணம் அரசின் இந்த செயல் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். 

ஹிந்துக்களுக்கு ஓட்டு உள்ளது என்பதை திமுகவினர் எப்பொழுதும் மறந்து விட வேண்டாம் என்றும் அவர் கடுமையாக சாடி உள்ளார். திமுகவினர் இந்துக்களை திட்டுவதில் தான் முன்னணியில் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை பரவிய செய்தி வளர்ந்து என்றால் அது குறித்து உடனடியாக பதில் அறிக்கை ஏன் கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் நிர்மலா சீதாராமன். 

தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய விஷயம் வதந்தியாக பரவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அதை அரசுதான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அந்த மாதிரி உத்தரவையே நாங்கள் கொடுக்கவில்லை என்று அரசு தான் கூற வேண்டும். ஆனால் இப்படி எதுவுமே அரசு செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். உதயநிதி இந்துக்களுக்கு எதிரானவர் தான். அவர் தான் கிறிஸ்தவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். 

அதில் தவறில்லை, யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் உங்கள் மதத்தை பற்றி பேசிக்கொள்ளுங்கள், எதிர்மதத்தை பற்றி தப்பாக பேசுவது நியாயமா? அதை கேட்க வேண்டுமா இல்லையா என்று கடுமையாக திமுகவை விமர்சித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

சேலம்.. பிரம்மாண்டமாக நடந்த திமுக இளைஞரணி மாநாடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையின் முக்கிய அம்சங்கள் இதோ!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!