பணி மாறுதலை திரும்ப பெற கோரி நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்...

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 12:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
பணி மாறுதலை திரும்ப பெற கோரி நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Highway Workers Demand to Receive Work Change ...

மதுரை

பணி மாறுதலை திரும்ப பெற கோரி நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் வட்டக்கிளைத் தலைவர் ராஜபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட இணைசெயலாளர்கள் பாண்டி, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உசிலம்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்,  "சாலை பணியாளர்கள் தொழிற்சங்க விரோதபோக்கு, அடிப்படை மனித உரிமை பறிப்பு, விடுப்பு விதிகளுக்கு முரணாக ஊதியம் பிடித்தம் செய்தல், 

சாலைப் பணியாளர்களை பழிவாங்கும் வகையில் பணிமாறுதல் உத்தரவு ஆகியவற்றை செயல்படுத்தும் திருச்சி வட்டகண்காணிப்பாளர் பழனி மற்றும் புதுக்கோட்டை கோட்ட பொறியாளர் சேதுபதி, ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், 

பணிமாறுதலை திரும்பபெறவும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தினர். 

இதில், மாவட்டத் தலைவர் சோலையப்பன், மாவட்டச் செயலாளர் மனோகரன், வட்டக்கிளை செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்கவுரை, சிறப்புரை, நிறைவுரை ஆகியவற்றை மாநிலப் பொருளாளர் தமிழ் உரையாற்றினார்.

PREV
click me!

Recommended Stories

திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றும் திமுக! இடுவாய் குப்பை கிடங்கிற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!