பசுமை வழிச்சாலையை பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் செய்ய இயலுமா? நடிகர் விவேக் வேண்டுகோள்;

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
 பசுமை வழிச்சாலையை பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் செய்ய இயலுமா? நடிகர் விவேக் வேண்டுகோள்;

சுருக்கம்

actor vivek suggested alternative option for this problem

சென்னை- சேலம் இடையேயான 8 வழி சாலை அமைப்பதால், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால், மக்கள் இந்த திட்டத்திற்கு எதிராக தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் போன்ற 5 மாவட்டங்களின் வழியாக இந்தன் 8 வழி சாலை திட்டம் நடைமுறை படுத்தப்பட உள்ளது. 274 கி.மீட்டர் தொலைவில் அமையவிருக்கும் இந்த  சேலம் டூ சென்னை பசுமை வழிச்சாலை, வளர்ச்சி திட்டங்களில் ஒன்றாக இருந்தாலும், இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே மக்கள் இத்திட்டதிற்க்கு எதிராக போராடி வரும் இந்த சூழலில் ,­ சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 41 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இத்திட்டத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இந்த பசுமைவழி சாலை அமைப்பது உறுதி. என தெரிவித்திருக்கிறார் .

இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கு எதிராக  மக்களும் சமூக ஆர்வலர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வழி நடக்கும் விவேக், மரங்கள் நடுவது போன்ற சமூக பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை ஆர்வலரான இவர் இந்த 8 வழி சாலை அமைக்க மாற்று வழி ஒன்றை தனது டிவிட்டர் பதிவினில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் ”தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.” என தெரிவித்திருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றும் திமுக! இடுவாய் குப்பை கிடங்கிற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!