
விழுப்புரம்
ஆழ்கடலிலும், பாலைவனத்திலும் அதிகளவில் மீத்தேன் உள்ளது. அங்கு எடுத்துக் கொள்ளுங்கள். விவசாய நிலத்தை விட்டு விடுங்கள் என்று மத்திய அரசு நெடுவாசல் ஐட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டி பொன்ராஜ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சியின் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.ஆர்.பார்க் மீட்டிங் ஹாலில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொறுப்பாளர்கள் ஜெய் ஆரோக்கியராஜ், சார்லஸ், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைமை வழிகாட்டியும், மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் தொழில்நுட்ப ஆலோசகருமான பொன்ராஜ் தலைமை தாங்கினார்.
அவர் பேசியது:
''நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் திட்டம் மூலம் எடுக்க இருக்கும் மீத்தேன் நம் தேசத்தின் வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாகும். அதனை நாம் வெளிநாட்டிலிருந்து 70 சதவீதம் அளவிற்கு இறக்குமதி செய்கிறோம். நம் நாட்டிலேயே அதனை உற்பத்தி செய்யும் திட்டத்தை நாம் மேம்படுத்த வேண்டும். ஆனால், விவசாய நிலத்திலிருந்து எடுக்க வேண்டியதில்லை.
விவசாய நிலத்தைவிட ஆழ்கடலிலும், பாலைவனப் பகுதியிலும் அதிகளவில் மீத்தேன் உள்ளது. ஆனால், விவசாய நிலத்திலிருந்து மீத்தேன் எடுக்கும் நெடுவாசல் ஐட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்'' என்று பேசினார்.